மெல்லிய தோற்றமுடைய ஸ்மார்ட் கைப்பேசி
7 ஆனி 2014 சனி 16:23 | பார்வைகள் : 9984
சோனி நிறுவனம் Xperia Z3 எனும் மெல்லிய தோற்றம் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
7 மில்லிமீற்றர்கள் தடிப்புடையதாகவும், முற்றிலும் புதிய வடிவமைப்பு உடையதாகவும் இந்த கைப்பேசி உருவாக்கப்படுகின்றது.
இது 5.2 அங்குல அளவு,1920 x 1080 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும், 2.7GHz வேகத்தில் செயற்படக்கூடிய Qualcomm Snapdragon 805 Mobile Processor, 3GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகவும் 20.7 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்படுகின்றது.
இக்கைப்பேசி எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.