Youtube அறிமகப்படுத்தும் புதிய வசதி!

2 வைகாசி 2014 வெள்ளி 13:15 | பார்வைகள் : 13829
உலகின் பிரசித்தம் பெற்ற வீடியோ தளமான யூடியூப், தனது தளத்தின் மூலம் வீடியோக்களை பகிர்பவர்களுக்காக புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யூடியூப்பில் பகிரப்படும் வீடியோக்களை சேனல் முறையில் வகைப்படுத்த முடியும், அவ்வாறு வகைப்படுத்தப்படாத வீடியோக்களை பயனர்களை பார்க்க வைப்பதற்காக தமது திரைப்படங்களை ஆரம்பத்தில் இணைக்க முடியும்.
இவ்வசதி Intro Videos என அழைக்கப்படுகின்றது. இதற்காக மூன்று செக்கன்கள் வரை ஓடக்கூடிய வீடியோக்களை பயன்படுத்த முடியும்.