Paristamil Navigation Paristamil advert login

அப்பிள் நிறுவனம் தயாரிக்கும் iWatch

அப்பிள் நிறுவனம் தயாரிக்கும் iWatch

15 சித்திரை 2014 செவ்வாய் 17:41 | பார்வைகள் : 16105


அப்பிள் நிறுவனம் மீள்தன்மை கொண்ட ஸ்மார்ட் கடிகாரங்களை உற்பத்தி செய்வதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

இந்த மீள்தன்மை கொண்ட ஸ்மார்ட் கடிகாரங்களுக்கான திரையினை LG நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

iWatch எனும் பெயருடன் இரு வகையான கடிகாரங்கள் வெளிவரவுள்ளன.

அதாவது ஆண்களுக்காக ஒரு வடிவமைப்பிலும், பெண்களுக்கான பிறிதொரு வடிவமைப்பிலும் வெளியாகவுள்ளன.

இவை 1.3 அங்குலம் மற்றும் 1.7 அங்குல அளவுடையனவாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்