அணுப்பிளவு பரிசோதனையை மேற்கொண்டு பிரித்தானிய சிறுவன் சாதனை!
8 பங்குனி 2014 சனி 11:30 | பார்வைகள் : 10124
அணுப் பிளவு உபகரணமொன்றை தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய, உலகிலேயே மிகவும் வயது குறைந்தவர் என்ற பெருமையை சிறுவன் ஒருவர் பெற்றுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனான ஜெமி எட்வார்ட் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்
லான்கஷியரிலுள்ள தனது பாடசாலை ஆய்வு கூடத்தில் அணுப்பிளவின் முயற்சி மூலம் ஹீலியத்தை உருவாக்கி ஜேமி சாதனை படைத்துள்ளார்.
ஜேமி ஆய்வு கூடத்தில் அணுப்பிளவு பரிசோதனையை மேற்கொள்ளப்போவதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்த போது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அணு பரிசோதனை மூலம் நீ பாடசாலையை தகர்க்கப் போகிறாயா? என அவர் ஜேமியிடம் வினவியுள்ளார்.
எனினும் ஜேமி தனது பரிசோதனை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத பாதுகாப்பான ஒன்றென்பதை விளக்கியதையடுத்து அவர் அவனுக்கு பரிசோதனையை மேற்கொள்ள அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் ஜேமி ஆய்வு கூடத்தில் மேற்படி அணு பிளவாக்க பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொண்டு அச்சத்துடன் அவதானித்துக் கொண்டிருந்த அந்த பாடசாலை தலைமை ஆசிரியர்களையும் ஏனையவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.