Paristamil Navigation Paristamil advert login

ஆப்பிள் வெளியிடும் மருத்துவ அப்ளிகேஷன்

ஆப்பிள் வெளியிடும் மருத்துவ அப்ளிகேஷன்

1 மாசி 2014 சனி 16:48 | பார்வைகள் : 15800


ஆப்பிள் நிறுவனம் Healthbook என்னும் மருத்துவ மொபைல் அப்ளிகேஷனை இந்த வருடம் IOS-8 ஆம் பதிப்புடன் வெளியிடவுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது IOS-8 ஆம் பதிப்பை இந்த வருடம் வெளியிடவுள்ளது. இத்துடன்  ஐவாட்ச் என்னும் கையணியையும், மருத்துவம் தொடர்பான ஹெல்த்புக் என்னும் அப்ளிகேஷனையும் அறிமுகப்படுத்தும் என செய்திகள் வெளியாகிவுள்ளது.

இந்த அப்ளிகேசன் நீங்கள் எவ்வளவு தூரம் நடந்துள்ளீர்கள்? எத்தனை கலோரி குறைந்துள்ளது? போன்ற உடற்பயிற்சி விவரங்களை கண்காணித்து சேமித்து வைக்கும்.

மேலும் உங்கள் இரத்த அழுத்தம், நீரேற்றம் அளவு, இதய துடிப்பு, மற்றும் குளுக்கோஸ் அளவு ஆகியவற்றையும் கண்காணிக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்