Paristamil Navigation Paristamil advert login

ஏடிஎம் திருட்டை தடுக்க புதிய தொழில்நுட்பம்

ஏடிஎம் திருட்டை தடுக்க புதிய தொழில்நுட்பம்

24 தை 2014 வெள்ளி 11:26 | பார்வைகள் : 12076


 ஏடிஎம் குறீயீட்டு எண் திருட்டை தடுக்கும் வகையில் “டிரை பின்” எனப்படும் புதிய தொழில் நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த தொழில் நுட்பத்தில் வண்ணங்கள், எண்கள் மற்றும் குறியீடுகளை பயன்படுத்தி விசைபலகை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு முறையும் விசைபலகை மாற்றமடையும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பயனாளிகள் தங்களுக்கு பிடித்த நிறம், வடிவம், குறியீடு மற்றும் எண்கள் அடங்கிய கடவுச்சொல்லை தெரிவு செய்யலாம். தற்போது நடைமுறையில் உள்ள நான்கு இலக்க கடவுச்சொல் திருட்டை தடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம் திருட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நண்பரான கிளைன் ரெனால்ட்ஸ் என்பவர் இந்த புதிய முறையை கண்டறிந்து உள்ளார்.

இந்த புதிய முறையானது மிகவும் பாதுகாப்பானதாகவும், மற்றவர்களால் திருட முடியாத வகையிலும் உருவாக்கபட்டு உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்