Paristamil Navigation Paristamil advert login

மனிதக் கழிவால் இயங்கும் சொகுசு பஸ்

மனிதக் கழிவால் இயங்கும் சொகுசு பஸ்

24 கார்த்திகை 2014 திங்கள் 14:14 | பார்வைகள் : 9478


 பிரித்தானியாவில் மனிதக் கழிவுகளால் இயக்கப்படும்  சொகுசு பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

 
பிரிஸ்டோல் நகரை சேர்ந்த ஜெனிக்கோ என்ற நிறுவனம் 40 பயணிகள் செல்லக்கூடிய மனித கழிவுகளால் இயங்கக் கூடிய சொகுசு பஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
 
இந்த சொகுசு பஸ்ஸில் வெளிவரும் புகைகள், டீசல் மற்றும் பெற்றோல் வாகனத்தை விட மிகவும் சிறிது என்றும் மனிதக் கழிவுகளால் வரும் வாயுவை வைத்து இயங்க கூடிய இந்த பஸ் 186 மைல்வரை செல்லக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து ஜெனிக்கோ நிறுவனத்தின் மேலாளர் முகமது சாதிக்  கூறுகையில், மாசற்ற இந்த பஸ் பிரித்தானியாவில் தூய்மையான காற்றை பரவச் செய்யும் எனக் கூறியுள்ளார்.
 
மேலும் 5 மனிதர்களால் ஒரு வருடத்திற்கு உருவாக்கப்படும் கழிவை வைத்து இந்த பேருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்