iPhone 7 தொடர்பான புதிய தகவல்கள் கசிவு!

20 கார்த்திகை 2014 வியாழன் 14:08 | பார்வைகள் : 13639
அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
இவை அறிமுகம் செய்யப்பட்டு குறுகிய காலத்திலேயே அடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 தொடர்பான தகவல்களும் கசிய ஆரம்பித்துள்ளன.
அப்பிள் நிறுவனம் இப்புதிய கைப்பேசியில் அதன் கமெராவில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் DSLR எனும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட அதி துல்லியம் வாய்ந்த கமெரா உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை இத்தகவலை உறுதிப்படுத்துவதற்கு 2015ம் ஆண்டு செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
இந்தக் பகுதியில்தான் iPhone 7 அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025