அப்பிள் கருவிகளை இலக்கு வைக்கும் Malware
6 கார்த்திகை 2014 வியாழன் 23:26 | பார்வைகள் : 9461
சீனாவில், அப்பிள் உற்பத்திகளை இலக்கு வைக்கக்கூடிய மெல்வெயார் எனப்படும் தீங்கு விளைவிக்கும் நிரல் இணையத்தில் உலா வருவதாக ஒன்லைன் பாதுகாப்பு நிறுவனமொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
apple malwareஇந்தத் தீங்கு நிரலின் பெயர் WireLurker என்பதாகும். இது அப்பிள் நிறுவனத்தின் மேசைக் கணனிகளையும், ஸ்மாட்ர்போன்களையும் பாதித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தீங்கு நிரல் சீனாவில் உருவாக்கப்பட்டதாகத் தோன்றுகிறதென பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்றாம் தரப்பிடம் இருந்து தரவிறக்கம் செய்யப்படும் அப்ஸ் எனப்படும் பிரயோக மென்பொருட்கள் தீங்குநிரல் பரவுகிறதென அமெரிக்காவை மையமாகக் கொண்ட Palo Alto Networks என்ற நிறுவனம் கூறுகிறது.
இந்தத் தீங்குநிரலின் பாதிப்புக்கு உள்ளான 400 இற்கு மேற்பட்ட அப்ஸ் வகைகள் மூன்றரை இலட்சத்திற்கு மேலான தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.