Paristamil Navigation Paristamil advert login

whatsappல் குரல்வழி அழைப்பு வசதி! அடுத்தாண்டில் அறிமுகம்

whatsappல் குரல்வழி அழைப்பு வசதி! அடுத்தாண்டில் அறிமுகம்

3 கார்த்திகை 2014 திங்கள் 10:28 | பார்வைகள் : 13177


 இளைஞர்களிடையே தகவல் பரிமாற்றத்தில் கொடிகட்டி பறந்து வருகின்ற whatsapp நிறுவனமானது, 2015 ஆம் ஆண்டில் இலவச குரல்வழி அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளது. 

 
whatsapp இந்த ஆண்டு இறுதியில் தனது இலவச குரல்வழி அழைப்பு சேவையை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய இறுதி அறிவிப்பின்படி whatsappன் இந்த இலவச குரல்வழி அழைப்பு சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குரல்வழி அழைப்பு சேவை சரியாக தொடங்குவது காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் பயன்பாட்டுக்கு whatsapp வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளது என்றும் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பிட்ட செல்போன்களில் இருந்து ஒலிவாங்கி தொடர்பான குறைபாடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
புதிய அம்சங்களுடன் whatsappன் 4.5.5 பதிப்பு வெளியாகுகிறது. ஏப்ரல் மாதத்தில் இத்தகைய சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
 
இத்தகைய சேவை அளிக்கப்பட்டால் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருவாயை வெகுவாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
 
ஏற்கனவே சீனாவின் விசாட், கொரியாவின் காகோடாக், இஸ்ரேலின் விபர் ஆகிய நிறுவனங்கள் குரல்வழி அழைப்பு சேவையை அளிப்பதால் அந்தந்த நாடுகளில் உள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்