Paristamil Navigation Paristamil advert login

உங்கள் ஸ்மாட் போனில் சார்ஜ் தீர்ந்து போய் விடுகிறதா?

உங்கள் ஸ்மாட் போனில் சார்ஜ் தீர்ந்து போய் விடுகிறதா?

1 கார்த்திகை 2014 சனி 13:14 | பார்வைகள் : 8677


 நவீன காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையுமே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது ஸ்மார்ட் போன்கள்.

ஸ்மார்ட் போன் இல்லை என்றால் பொழுதே விடியாது என்ற நிலை தான் உள்ளது.
 
திடீரென ஸ்மார்ட் போனில் சார்ஜ் குறைந்து போனால் அவ்வளவு தான், அந்த அவஸ்தையை அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.
 
பற்றரியின் ஆற்றலுக்கு வரம்பு இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் பற்றரியின் ஆயுளையும், அதன் சார்ஜிங் ஆற்றலையும் அதிகரிக்கலாம்.
 
1. வெப்பநிலை உங்கள் பற்றரியை பாதிக்கலாம். போனைக் கூடுமானவரை சூரிய ஒளியில் நேரடியாகப் படும்படி வைப்பதைத் தவிர்க்கவும். இது குளிருக்கும் பொருந்தும்.
 
2. பற்றரியை முழுவதும் சார்ஜ் செய்வது நல்லது. ஆனால், உண்மையில் முழு சார்ஜ் செய்யாமல் பகுதி அளவு சார்ஜ் செய்வது ஏற்றது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர், அதாவது  40-80 சதவிகிதம் வரை போதுமானதாம்.
 
3. சார்ஜிங்கில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், முழுவதும் சார்ஜான பிறகு பிளக் செய்யப்பட்ட நிலையிலேயே விடுவதைத் தவிர்க்கவும். அதிகமாக சார்ஜ் ஆவதும் பற்றரியை பாதிக்கும்.
 
4. அதே போல அதிவிரைவு சார்ஜர் மற்றும் போலி சார்ஜர்களைப் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்