நொக்கியாவைக் கைவிடும் மைக்ரோ-சொவ்ட்
24 ஐப்பசி 2014 வெள்ளி 14:09 | பார்வைகள் : 9367
மைக்ரோ சொவ்ட் நிறுவனம் உற்பத்தி செய்யும் புதிய ஸ்மார்ட்போன்களில் இருந்து நொக்கியா என்ற பெயரை நீக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணினியுலக ஜாம்பவான் கையடக்க தொலைபேசி உற்பத்தியில் உச்சத்தில் இருந்த நொக்கியாவின் போன் உற்பத்திப் பிரிவைக் கொள்வனவு செய்து, ஒரு வருடம் பூர்த்தியாவதற்கு முன்னதாக மாற்றங்கள் நிகழ்கின்றன.
இவற்றின் பிரகாரம், ‘நொக்கியா லுமியா’ கையடக்கத் தொலைபேசிகள் இனிமேல் ‘மைக்ரோ-சொவ்ட் லுமியா’ என்றழைக்கப்படும்.
மைக்ரோ-சொவ்ட் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 7.2 பில்லியன் டொலர் பெறுமதியான பேரத்தின் ஊடாக நொக்கியா போன் உற்பத்திப் பிரிவை கொள்வனவு செய்திருந்தது. அன்றைய நாள் தொடக்கம் படிப்படியாக நொக்கியா என்ற பெயரைத் தள்ளி வைக்க மைக்ரோ-சொவ்ட் நடவடிக்கை எடுத்தது.
எனினும், மைக்ரோ-சொவ்ட் நிறுவனம் நொக்கியாவின் ஏனைய பிரிவுகளைக் கொள்வனவு செய்யவில்லை. அவை தொடர்ந்தும் நொக்கியா என்ற பெயரில் இயங்கும்.