Paristamil Navigation Paristamil advert login

iPhone 6 மற்றும் iPhone 6+ உத்தியோகபூர்வமாக வெளியீடு

iPhone 6 மற்றும் iPhone 6+ உத்தியோகபூர்வமாக வெளியீடு

10 புரட்டாசி 2014 புதன் 07:53 | பார்வைகள் : 9754


அப்பிள் நிறுவனம் iPhone 6 மற்றும் iPhone 6+ ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
 
உலகளாவிய ரீதியில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இலத்திரனியல் உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனம் நேற்றைய தினம் தனது புதிய தயாரிப்புக்களான iPhone 6 மற்றும் iPhone 6+ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
 
2007ஆம் ஆண்டு முதல் ஐ-போன் மற்றும் ஐ-பாட்களை இந்நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு செப்டெம்பர் 9ஆம் திகதி ‘மெக்’ ரக கணனிகளை இந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜொப் அறிமுகப்படுத்தியிருந்தார்.
 
இதேபோல ஆண்டு தோறும் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்துவதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
 
இந்நிலையில், அப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான iPhone 6 மற்றும் ‘iPhone 6+’ நேற்று வெளியிட்டது இதுவரை அறிமுகமான ஐபோன்களில் இது சிறப்பு வாய்ந்தது என்றும், இதில் “Retina HD” வசதியுடனான திரையும் உள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
 
திரையின் அளவு  iPhone 6 மற்றும் iPhone 6+ முறையே 4.70 இன்ச் 5.5 இன்ச் என்ற அளவிலும், இதுவரை வந்த ஐபோன்களிலேயே 84 மடங்கு கிராபிக்ஸ் திறனும், 50 மடங்கு மின்கல திறனும் கொண்டதாக இருக்கும் என அறிவித்துள்ளது அப்பிள் நிறுவனம்.
 
ஐஸ்டோரில் இந்த தொலைபேசிக்கு 1.3 மில்லியன் அப்ஸ்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. உள்ளக நினைவகம் 16/32/64/128 GB, இயங்குதளம்  iOS 8 எனவும் கூறியுள்ளது.
 
இது ‘iPhone 5S’ ஐவிட, 185 மடங்கு அதிக பிக்ஸல் திறன் கொண்டதாக iPhone 6 வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
200ற்கும் மேற்பட்ட ஒலி உள்வாங்குதல்களை சிறப்பாக புரிந்து கொள்ளும் விதமாகவும், கமராவுடன் ஐசைட் எனும் கண்சிமிட்டினால் படம் பிடிக்கும் வசதியும் iPhone 6 இல் உள்ளது.
 
iPhone 6 இல் Wi-Fi வசதி iPhone  5Sஐ விட அதிகமாகவும், சமிக்ஞை இல்லாத இடங்களில் Wi-Fi அழைப்பு வசதியை பயன்படுத்தலாம் என அப்பிள் கூறியுள்ளது.
 
iPhone 6 இலிருந்து தனது முதல் ட்விட்டை பதிவு செய்துள்ளதாக அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்