Paristamil Navigation Paristamil advert login

புதிய ஐபோன் வேண்டுமா? பழையதை விற்று விடுங்கள்

புதிய ஐபோன் வேண்டுமா? பழையதை விற்று விடுங்கள்

29 ஆவணி 2014 வெள்ளி 18:54 | பார்வைகள் : 8881


 புதியதொரு ஐபோனை வாங்கத் தயாராகின்றீர்களா? அப்படியானால் பழையதை விற்கத் தாமதம் வேண்டாம் என்கின்றனர், சந்தை ஆய்வாளர்கள்.

 
ஐபோன்-6 அறிமுகமாகவுள்ள நிலையில், பழைய ஐபோன்களின் விலை மட்டங்கள் வீழ்ச்சி கண்டு வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
 
புதிய ஐபோன் செப்டெம்பர் ஒன்பதாம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஐபோன்-5, ஐபோன்-4c போன்றவற்றின் விலைகள் சடுதியாக கீழிறங்கியிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
 
இன்றளவில் 16ஜிபி கொள்ளவுடைய ஐபோன்-5s கருவியின் விலை 290 டொலராக குறைந்திருக்கிறது. ஐபோன்-6 பற்றி அறிவிப்பு வெளியான நாளில் இருந்த விலைமட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 20 சதவீத வீழ்ச்சியாகும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்