அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை பாவிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை!
28 ஆடி 2014 திங்கள் 10:00 | பார்வைகள் : 9757
ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் தம்மை புகைப்படம் எடுத்து மகிழ்வது சாதாரண விடயமாகும்.
இதில் சில அந்தரங்கமான விடயங்களையும் புகைப்படம் எடுத்து பின்னர் அதனை அழித்து விடுவார்கள்.
ஆனால் அவ்வாறு அழித்த பின்னரும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளிலிருந்து குறித்த படங்களை மீட்டெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உதாரணமாக eBay தளத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 20 அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளில் Avast நிறுவனத்தின் விசேட மென்பொருள் ஒன்றினைப் பயன்படுத்தி 40,000 அந்தரங்க புகைப்படங்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை அன்ரோயிட் மென்பொருளை உற்பத்தி செய்யும் கூகுள் நிறுவனம் 3.0 பதிப்பு பிந்திய இயங்குதளங்களில் அழித்த புகைப்படங்களை மீட்டெடுக்க முடியாது என தொடர்ச்சியாக தெரிவித்து வந்தது. இந்நிலையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளமையால் அன்ரோயிட் பாவனையாளர்கள் அதிகர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோன்று புதிய iPhone மற்றும் iPad களிலும் இதே பிரச்சினை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.