Paristamil Navigation Paristamil advert login

கணனி மவுசுக்கு பிரதியீடாக வரும் புதிய தொழில்நுட்பம்

கணனி மவுசுக்கு பிரதியீடாக வரும் புதிய தொழில்நுட்பம்

25 ஆடி 2014 வெள்ளி 19:06 | பார்வைகள் : 12051


எதிர்காலத்தில் மவுசுக்கு பதிலாக கணனியை கையாள்வதற்கு முப்பரிமாண தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்டதும், கையில் அணியக்கூடியதுமான சாதனம் பயன்படுத்தப்படவுள்ளது.

இச்சாதனத்தை அணிந்து கொண்டு விரல்களை அசைப்பதன் ஊடாக கணனியை இலகுவாக கட்டுப்படுத்த முடியும்.

இதில் Accelerometer, Magnetometer மற்றும் Gyroscope (ஒரே இடத்தில் நிறுத்தி சுழல வைக்கும் துணைச்சாதனம்) என்பன இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் இதனை தொடுதிரைகளில் பயன்படுத்தமுடிவதுடன், ஸ்வைப் (Swipe) முறையில் வலது, இடது பக்கங்களுக்கு இலக்குகளை நகர்த்த முடியும்.

Wyoming பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Anh Nguyen மற்றும் Amy Banic என்பவர்களால் இச்சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இச்சாதனத்தை முப்பரிமாண இலக்குகளின் பயன்படுத்தும்போது 1 mm அளவில் அமைவிட வழு ஏற்படும் என இதனை உருவாக்கியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்