இருதயத் துடிப்பை அதிகரிக்கும் உயிரில் பேஸ்மேக்கர் கருவி
19 ஆடி 2014 சனி 14:18 | பார்வைகள் : 9996
இதய துடிப்பை அதிகரிக்கும் பேஸ்மேக்கர் கருவிகளை உடலுக்குள் உருவாக்குதல் என்ற கனவு நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லையென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்க விஞ்ஞானிகள் இருதய கலங்களுக்கு மரபணுவை செலுத்துவதன் மூலம் அவற்றை பேஸ்மேக்கர்களாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளார்கள். இது தொடர்பாக பன்றிகளில் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அளித்துள்ளது.
இந்த உயிரியல் பேஸ்மேக்கர் கருவி பயனுறுதி வாய்ந்த முறையில் நோயை குணப்படுத்தியதாக லொக்ஏஞ்சல்ஸ் செடார்ஸ்-சினாய் இருதய சிகிச்சை நிறுவனம் அறிவித்துள்ளது.
எவ்வாறேனும், இந்த சோதனை மனிதர்களில் வெற்றி பெறுவது இப்போதே சாத்தியமில்லை எனத் தெரிகிறது.