ரிமோர்ட் கன்ட்ரோல் கருத்தடை சாதனம்
9 ஆடி 2014 புதன் 18:07 | பார்வைகள் : 9973
அமெரிக்க விஞ்ஞானிகள் தொலைதூரத்திலிருந்து இயங்க வைக்கக்கூடிய கருத்தடை கணனி சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
மைக்ரோ-சிப்பின் வடிவில் உருவாக்கப்பட்ட றிமோட்-கன்ட்ரோல் கருத்தடை சாதனத்தை பெண்களின் சருமத்திற்கு அடியில் பொருத்தப்படும். இது லெவனோ-கெஸ்ரெல் என்ற ஹார்மோனை வெளியிடும்,
தொடர்ந்து 16 வருடங்கள் தினந்தோறும் ஹார்மோன் வெளியிடப்படும் வகையில் மைக்ரோ-சிப் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை எந்தவொரு தருணத்திலும் றிமோட்-கன்ட்ரோல் கருவி மூலம் நிறுத்தக்கூடியதாக இருப்பது சிறப்பம்சம்.
இது மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் பில் கேற்ஸின் ஆதரவைப் பெற்ற ஒரு திட்டத்தின் உருவாக்கப்படுகிறது.
ரிமோட் கன்ட்ரோல் கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்தி அடுத்த ஆண்டு மருத்துவ சோதனைகள் நடத்தப்படவுள்ளன. சோதனைகள் வெற்றிபெறும் பட்சத்தில் இது 2018ம் ஆண்டளவில் விற்பனைக்கு வரும்.