வெளியானது ஆப்பிளின் ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 5சி
11 புரட்டாசி 2013 புதன் 11:39 | பார்வைகள் : 10764
ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 5 சியை வெளியிட்டுள்ளது.நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஐபோன் 5 எஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
ஐபோன் 5எஸ்
ஆப்பிளின் கடைசி வெளியீட்டான ஐபோன் 5க்கு பிறகு வெளியாகியுள்ளது.
தங்க நிறம் மற்றும் சில்வர் மற்றும் ஸ்லேட் நிறத்தில் கிடைக்கின்றது.
வேகமாக இயங்கக்கூடிய A7 சிப்பினை கொண்டுள்ளதுடன், இது ஐபோன்5 வினை விட இரு மடங்கு வேகமாக செயல்படும்.
4 அங்குல ரெட்டினா திரையையும், 8 MP, 3264x2448 pixels கெமரா, 1080p HD வீடியோ ரெக்கோர்டிங், ஐபோன்5எஸ் கொண்டுள்ளது.
ஆப்பிளின் புதிய இயங்குதளமான ஐ.ஓ.எஸ். 7 மூலம் இது இயங்குகின்றது.
இதில் குறிப்பிட்டத்தக்க வகையில் விரல் ரேகையை வைத்து போனிற்குள் நுழையக்கூடிய பிங்கர்பிரிண்ட் ஸ்கேனரைக் கொண்டுள்ளது.
ஐபோன் 5சி
பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ள இது பிங்க், பச்சை, வெள்ளை, நீலம், மற்றும் மஞ்சள் நிறங்களில் இது கிடைக்கப்பெறுகின்றது.
இதுவும் 4 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டுள்ளது. A6 புரசசர் , 8 மெகா பிக்ஸல் கெமரா, புதிய பேஸ்டைம் எச்.டி. கெமரா போன்ற வசதிகளை இது கொண்டுள்ளது.