விரைவில் வருகிறது Android KitKat 4.4
4 புரட்டாசி 2013 புதன் 11:54 | பார்வைகள் : 11341
உலகளவில் ஒட்டு மொத்த ஸ்மார்ட்போன்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களால் செயல்படுகிறது.ஆன்ட்ராய்ட் நிறுவனத்தை கூகுள் வாங்கிய பிறகு பல புதிய வெர்ஷன்களை வெளியிடுகிறது.
சமீபத்தில் தான் ஆன்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆன்ட்ராய்ட் 4.4 கிட் காட் என்ற புதிய இயங்குதளத்தை வெளியிட உள்ளது.
நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்துடன் இணைந்து கூகுள் இந்த இயங்குதளத்தை வெளியிடுகிறது.
ஆன்ட்ராய்டின் அடுத்த ஓஎஸ்-க்கு இந்த பெயரை நெஸ்ட்ளே நிறவனத்துடன் இணைந்து வைத்திருப்பது சிறப்பாக உள்ளது, இதை விட ஒரு நல்ல பெயரை எங்களால் கற்பனை செய்ய முடியவில்லை என ஆன்டிராய்டின் மார்கெட்டிங் டைரெக்டர் மார்க் வால்னெர்பெர்க் தெரிவித்துள்ளார்.
நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்தின் மார்கெட்டிங் தலைமை அதிகரியான பாட்ரிஸ் புலா கூறுகையில், உலகத்தின் மிக பிரபலமான மொபைல் ஓஎஸ் உடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த பெயர் சூட்டப்பட்டது ஏன் என்ற விளக்கத்தையும் கூகுள் அளித்துள்ளது.
அதாவது, ஆன்டிராய்ட் ஓஎஸ் கொண்ட மொபைல்கள் அல்லது டேப்லெட்கள் போன்ற சாதனங்கள் நமது வாழ்க்கையை இனிப்பாக்குகின்றன. அதனால்தான் இதுவரை ஆன்டிராய்ட் ஓஎஸ்களுக்கு கப்கேக்(Cupcake), டூநட்(Donut), எக்லையர்(Eclair), ப்ரோயோ(Froyo), ஜிஞ்சர்பிரட்(Gingerbread), ஹனிகோம்ப்(Honeycomb), ஐஸ்கிரீம் சான்ட்விச்(Ice Cream Sandwich) மற்றும் ஜெல்லிபீன்(Jelly Bean) என பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் எல்லோருக்கும் பிடித்த சாக்லேட்டின் பெயர் மட்டும் இடம் பெறாமல் இருந்தது அதனால் தான் இப்பொழுது அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.