Paristamil Navigation Paristamil advert login

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை வடிவமைக்கிறது கூகுள்

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை வடிவமைக்கிறது கூகுள்

28 ஆவணி 2013 புதன் 08:42 | பார்வைகள் : 10766


 டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை கூகுள் நிறுவனம் விரைவில் தயாரிக்க உள்ளது.தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு கார்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இருப்பினும் எந்தவொரு நிறுவனமும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.

 
இதனையடுத்து தானாகவே கார்களை உற்பத்தி செய்ய நினைத்த கூகுள், டிரைவர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
 
இதற்காக காரில் கமெராக்கள், ரேடார்கள் மற்றும் கணனி தொழில்நுட்பங்களை கூகுளே வழங்கவுள்ளது.
 
இந்த கார்கள் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்.
 
இதற்கான பணிகள் முடிவடைந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் வீதிகளில் சோதனை ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது.
 
போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்