பிரித்தானியா செல்லும் சட்ட விரோத குடியேற்ற வாசிகளை தடுக்க சுமார் 76 ஒளிப்பதிவு கண்காணிப்பு கருவிகள்.
10 புரட்டாசி 2023 ஞாயிறு 06:56 | பார்வைகள் : 7628
பிரான்ஸ் தேசத்தின் வடபகுதி நகரங்களான Pas-de-Calais மற்றும் Somme நகரங்களில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியா செல் முற்படும் குடியேற்ற வாசிகளைத் தடுக்க பிரான்சும், பிரிட்டனும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக குறித்த இரு நகரங்களை அண்டியுள்ள கடல் பிரதேசங்களிலும், 5 கிலோமீட்டர் துரத்தை உலங்கு வானூர்திகள், ட்ரோன்கள் சிறியரக விமானங்களில் சுமார் 76 ஒளிப்பதிவு கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்தி தேடுதல் வேட்டைகளை மேற்கொள்ள குறித்த நகரங்களின் நீதிமன்றங்கள் அனுமதி அளித்துள்ளது.
பிரான்ஸ் சட்டப்படி இத்தகைய அனுமதி மூன்று மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குமேல் காவல்துறை ஒளிப்பதிவு கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும் என்றால் மீண்டும் நீதித்துறையின் அனுமதியை பெற வேண்டும்.
இது ஒரு பரீட்சாத்தத்த நடவடிக்கை என்பதால் முதலில் மூன்று மாதங்கள் போதுமானது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையால் கணிசமான சட்டவிரோத ஆள்க்கடத்தலை தடுத்து நிறுத்த முடியும் என காவல்துறையினர் நம்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.