ஆஸ்திரியாவில் பச்சை குத்தியவர்களுக்கு போக்குவரத்து இலவசம்!
.jpeg)
10 புரட்டாசி 2023 ஞாயிறு 10:35 | பார்வைகள் : 8797
ஆஸ்திரியா நாட்டில் பச்சை குத்துபவர்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவச பொது போக்குவரத்து பயணத்தை அரசாங்கம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தை ஆஸ்திரிய காலநிலை அமைச்சர் லியோனர் கியூஸ்லர் அறிமுகப்படுத்தினார்.
இந்த பச்சை குத்துதல் ஆஸ்திரிய காலநிலை டிக்கெட் (KlimaTickets) முகாமின் ஒரு பகுதியாகும்.
உடலில் 'Climate Tickets' டாட்டூவைக் குத்திக்கொள்பவர்களுக்கு இலவசப் பயணம் கிடைக்கும்.
அவர்கள் ரயில் மற்றும் மெட்ரோ பயணத்தை இலவசமாகப் பயன்படுத்தலாம். பச்சை குத்துவது 1000 யூரோ டிக்கெட்டுக்கு சமமாக இருக்க வேண்டும்.
சால்ஸ்பர்க் மற்றும் செயின்ட் பால்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது அமைச்சரின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முதலில் பச்சை குத்திக்கொள்ளும் மூன்று பேருக்கு இலவச பயணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அரசின் விளம்பரங்களை உடலில் அச்சிட முடியாது என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025