ரஷ்ய படை கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களை மீட்கும் உக்ரைன்
.jpeg)
10 புரட்டாசி 2023 ஞாயிறு 11:50 | பார்வைகள் : 8910
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கிட்டத்தட்ட 19 மாதங்களாக நடைபெற்று வருகின்றது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரஷ்ய படை கட்டுப்பாட்டில் வைத்து இருந்த பல பகுதிகளை உக்ரைனிய படைகள் எதிர் தாக்குதல் நடத்தி மீண்டும் கைப்பற்றி வருகின்றது.
சமீபத்திய போர் நிலவரத்தின் படி, இருநாடுகளும் அதிக அளவிலான வான் தாக்குதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் சென்ற 30 சதவீத உக்ரைனிய நிலப்பரப்பு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி இருப்பதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் பல பகுதிகளில் ரஷ்ய வீரர்கள் விட்டுச் சென்ற வெடிப் பொருட்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டி உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் அடிப்படையில், கார்கிவ், கெர்சன் மற்றும் மைகோலேவ் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1