மொராக்கோ நிலநடுக்கம் - அவசியம் என்றால் உதவுவோம் - ஜனாதிபதி மக்ரோன்கருத்து
10 புரட்டாசி 2023 ஞாயிறு 11:52 | பார்வைகள் : 7355
மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000 இற்கும் அதிமானோர் பலியானநிலையில், பிரான்ஸ் சார்பில் அவசியம் என்றால் உதவ தயாராக இருப்பதாகஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
‘மொராக்கோ நிலநடுக்கத்தில் பிரான்ஸ் உதவுவதற்கு தயாராக இருக்கிறது!’ எனதெரிவித்த மக்ரோன், “மொராக்கோ சார்பில் எங்களது உதவியினை பயனுள்ளதாககருதினால் நாம் அனைத்து விதங்களிலும் உதவ தயாராக இருக்கிறோம்!” எனவும்தெரிவித்தார்.
இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் G20 மாநாட்டில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்தேஇதனை இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.