Paristamil Navigation Paristamil advert login

செனல் 4 தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையை ஏற்க முடியாதென அறிவிப்பு

செனல் 4 தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையை ஏற்க முடியாதென அறிவிப்பு

10 புரட்டாசி 2023 ஞாயிறு 13:16 | பார்வைகள் : 5065


செனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் தொடர்பான இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளதை நாங்கள் பார்த்தோம்.

பொறுப்புள்ள பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் இந்த ஊடக அறிக்கை மிகவும் பாரதூரமானது என்பதுடன் நாட்டுக்கு செய்த அவமதிப்பு. மக்களின் பாதுகாப்புக்கு செய்த பெரும் சேதமாகவே நான் காண்கின்றேன்.

பாதுகாப்பு அமைச்சின் இந்த அறிக்கையை வெட்கமற்ற, எந்த பயனும் இல்லாத தோல்வியான முயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு வெள்ளையடித்து, அவர்களை நிரபராதிகளாக மாற்றும் முயற்சி. சுரேஷ் சாலேவை தூக்கிலிடுமாறு கோரவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிறைத்தண்டனை வழங்குகள் என்று கேட்கவில்லை. இவர்களை குற்றவாளிகள் என்றும் கூறவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறே நாங்கள் கோருகிறோம். விசாரணை நடத்தி வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அறிக்கையை வெளியிடுங்கள்.

அப்போது நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயார் எனவும் அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்