Paristamil Navigation Paristamil advert login

யாழில் சற்று முன்னர் கோர விபத்து - இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் சற்று முன்னர் கோர விபத்து - இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

10 புரட்டாசி 2023 ஞாயிறு 17:31 | பார்வைகள் : 3664


யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது   

கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை(10) இரவு கோப்பாய் இராச பாதை வீதியில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்