Paristamil Navigation Paristamil advert login

பாரிஸ் Porte de la Chapelle பகுதியில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாரிஸ் Porte de la Chapelle பகுதியில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

10 புரட்டாசி 2023 ஞாயிறு 18:03 | பார்வைகள் : 6567


பாரிஸ் தலைநகரில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் A1 நெடுஞ்சாலைக்கு அண்மித்த பகுதியான Porte de la Chapelle பகுதியிலேயே இந்த கொலைச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.

போதைக்கு அடிமையான இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கையில் "கொலை செய்யப்பட நபர் தகராறில் இருந்து தப்பித்து ஓட முற்பட்ட வேளையில் கொலைக்கு காரணமான நபர் அவரை இரும்பு கம்பியால் தலையில் அடித்தே கொலை செய்தார் " என le parisien பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளனர்.

தகராறில் ஈடுபட்ட இருவரும் சோமாலியா நாட்டைச் சேர்ந்த அகதிகள் என தெரியவருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்