பிரான்ஸ் தூதரகத்திற்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள். தூதுவர் Christophe Lecourtier.

10 புரட்டாசி 2023 ஞாயிறு 19:02 | பார்வைகள் : 20457
மொரோக்கோவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாகவும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிற்க்கும் தாங்கள் பொறுமையாக பதிலளித்து வருவதாகவும் மொரோவிற்கான பிரன்ஞ்சுத் தூதுவர் Christophe Lecourtier தெரிவித்துள்ளார்.
தங்களின் தூதரகத்தை மொரோக்கோவில் தொடர்பு கொள்ள +212 53 76 89 900 இலக்கமும், பிரான்சில் தொடர்பு கொள்ள 01 43 17 51 00 இலக்கமும் உள்ளது என அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
அதேவேளை மொரோக்கோ மக்களுக்கும், அரசுக்கும் தூதுவர் Christophe Lecourtier மற்றும் ஒரு செய்தியை தெரிவித்துள்ளார். "நாங்கள் மொரோக்கோ மக்களுக்கு உதவத் தயாராக உள்ளோம், பிரான்சின் தெற்குப் பகுதியில் உங்களுக்கு தேவையான வளங்கள் தயாரக உள்ளது. இது போன்ற சூழ்நிலைக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வளங்கள் அவை, மொராக்கோ அரசு பச்சை கொடி காட்டினால் சில மணிநேரங்களில் இந்த வளங்கள் உங்களிடம் மொராக்கோ அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்ப்பட்டு வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1