பெண்களின் மன அழுத்தத்தை கண்டறியும் மார்புக்கச்சை (Bra)
7 மார்கழி 2013 சனி 17:04 | பார்வைகள் : 10679
மன அழுத்தத்தை கண்டுபிடித்து எச்சரிக்கக்கூடிய மார்புக்கச்சை ஒன்றை அமெரிக்க வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் பல்தேசிய தொழில்நுட்பக் கம்பனியான மைக்ரோ சொஃப்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இருதய மற்றும் தோல் செயற்பாடுகளை கண்காணிக்கும் அகற்றக்கூடிய உணர்கருவிகளைக் கொண்ட இந்த மார்புக்கச்சை பயன்பாட்டாளரது மன நிலையில் ஏற்படும் மாற்றங்களை சுட்டிக் காட்டுகிறது.
மன அழுத்தத்துடன் தொடர்புடைய அளவுக்கதிகமாக உண்ணும் பழக்கத்தை குணப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்த அணியக்கூடிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணர்கருவிகள் இருதயத்துக்கு நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த தொழில்நுட்பத்தை மார்புக்கச்சை வடிவில் பயன்படுத்த தீர்மானித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேற்படி தொழில்நுட்பத்தை ஆண்களுக்கான கீழ் உள்ளாடையில் பயன்படுத்திய போது உணர்கருவிகளுக்கும் இருதயத்துக்குமிடையிலான தூரம் அதிகமாக இருந்ததால் உரிய பெறுபேறுகளைப் பெற முடியவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் மேற்படி மார்புக்கச்சையானது 4 நாட்களில் தினசரி சுமார் 6 மணித்தியாலங்கள் பெண்களால் அணியப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
அந்த மார்பு கச்சையிலுள்ள உணர் கருவிகளை 2 மணித்தியாலத்திலிருந்து 4 மணித்தியாலம் வரை மின்னேற்றி பயன் படுத்த முடியும்.