Paristamil Navigation Paristamil advert login

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய போர்ட்டேபிள் ஸ்பீக்கர் அறிமுகம்

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய போர்ட்டேபிள் ஸ்பீக்கர் அறிமுகம்

18 கார்த்திகை 2013 திங்கள் 09:54 | பார்வைகள் : 9289


 Favi நிறுவனமானது புளூடூத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டதும் இலகுவாக எடுத்துச்செல்லக்கூடியதுமான ஸ்பீக்கர்களினை அறிமுகம் செய்துள்ளது.Boomerang, Boomerang Mini என்ற இரண்டு வகை பதிப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 
வெள்ளை, கறுப்பு, மஞ்சள் எனும் மூவகை நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள Boomerang ஸ்பீக்கர் ஆனது 7.83 x 8.2 x 2 அங்குல அளவு கொண்டதாகவும், 6 W சக்தியினை வெளிவிடக்கூடியதாகவும் இருக்கின்றது.
 
இதன் பெறுமதியானது 79.99 டொலர்களாகும்.
 
இதேவேளை Boomerang Mini 4 W சக்தியினை வெளிவிடக்கூடியதாகவும், 5.91 x 6.12 x 1.49 அங்குல அளவுடையதாகவும் காணப்படும் அதேவேளை இதன் விலையானது 59.99 டொலர்களாக காணப்படுகின்றது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்