அப்பிளை முந்தும் சம்சுங்
18 ஐப்பசி 2013 வெள்ளி 17:42 | பார்வைகள் : 11560
அப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 5S ஐ அறிமுகப்படுத்தியிருந்தது.
இதில் முக்கியமாக குறிப்பிடத்தக்க விடயமாக விரல் ரேகையை வைத்து போனிற்குள் நுழையக்கூடிய பிங்கர்பிரிண்ட் ஸ்கேனரை இம்மாதிரியில் அப்பிள் அறிமுகப்படுத்தியிருந்தது.
இது போனுக்கு சிறப்பான பாதுகாப்பை அளிப்பதாக அப்பிள் தெரிவிக்கின்றது.
இதேபோல் எச்.டி.சி. நிறுவனமும் தனது வன் மெக்ஸ் ஸ்மார்ட் போனில் பிங்கர்பிரிண்ட் வசதியை வைத்துள்ளது.
அப்பிளை விட சற்று மேம்பட்ட சிந்தனையும், புத்துருவாக்க சிந்தனையும் கொண்டுள்ள செம்சுங் ஒரு படி மேலே சென்று கண்களை ஸ்கேன் செய்து அதன் அடிப்படையில் போனிற்குள் நுழையக் கூடிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களின் அடுத்த வெளியீடான கெலக்ஸி எஸ்5 வில் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இத்தகவலை செம்சுங் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.