360 டிகிரியில் புகைப்படம் எடுக்கும் புதிய கமெரா
17 ஐப்பசி 2013 வியாழன் 12:12 | பார்வைகள் : 10915
புகைப்படங்களை 360 டிகிரியில் எடுக்கக்கூடிய Ricoh Theta எனும் வயர்லெஸ் கமெரா உருவாக்கப்பட்டுள்ளது.400 டொலர்கள் பெறுமதியான இக்கமெராவில் 4GB நினைவகம் காணப்படுகின்றது. இதன் மூலம் 1,200 படங்களை எடுக்கக்கூடிய வசதி காணப்படுகின்றது.
மேலும் 5 மெகாபிக்சல்கள் உடைய சென்சாரை கொண்டுள்ள இதன் மின்கலத்தினை ஒரு முறை சார்ஜ் செய்த பின்னர் 200 புகைப்படங்களை எடுக்க முடியும்.
இதன் வயர்லெஸ் இணைப்பு மூலம் iPhone 4S, iPhone 5 போன்றவற்றினை இணைக்கக்கூடியதாக இருக்கின்ற போதிலும் அன்ரோயிட் சாதனங்களை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.