கூகுள் கிளாசுக்கு சவால் விடும் வகையில் அறிமுகமாகும் ION கிளாஸ்
15 ஐப்பசி 2013 செவ்வாய் 13:25 | பார்வைகள் : 10466
தொழில்நுட்ப உலகில் கூகுள் கிளாஸ்கள் பாரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்த விடயமே.தற்போது அதனை விஞ்சும் வகையில் ION கிளாஸ் எனும் புதிய சாதனம் அறிமுகமாகவிருக்கின்றது.
ஸ்மார்ட் கைப்பேசிகள் அல்லது டேப்லட்களின் உதவியுடன் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ION கிளாஸ் ஆனது ரிமோட் போன்று செயற்படுதல், அலேர்ட்களை தோற்றுவித்தல், அறிவிப்புக்களை தெரிவித்தல் (Notifications) போன்ற பல தொழிற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றது.
இதில் Bluetooth 4.0 சிப், மின்கலம், பல்வர்ண எல்.ஈ.டி இரு பொத்தான்கள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.