புறக்கணிக்கப்பட்ட பிரான்ஸ் - மொராக்கோவுக்கு ஜனாதிபதி இம்மானுவல்மக்ரோன் கண்டனம்
13 புரட்டாசி 2023 புதன் 15:01 | பார்வைகள் : 8434
மொராக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினை அடுத்து, உதவிக்கு தயாராகஇருப்பதாக பிரான்ஸ் அறிவித்தும், அந்த உதவிகளை மொராக்கோபுறக்கணித்துள்ளது. இந்த செயற்பாட்டுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்கண்டனம் வெளியிட்டுள்ளார்.
“நான் அண்மைய நாட்களில் பல்வேறு சர்ச்சைகளை காண்கின்றேன். ஆனால்அவற்றுக்கெல்லாம் எவ்வித காரணமும் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள்இங்கே தயாராக இருக்கிறோம். நேரடியான மனிதாபிமான உதவிகளை வழங்ககாத்திருக்கிறோம். ஆனால் அவை அனைத்தும் மொராக்கோவின் அரசரிடமும்அரசாங்கத்திடமுமே இருக்கிறது. அவர்களது இறையான்மை அதற்குவழிவிடவேண்டும்!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.
மொராக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 3,000 பேர் வரைபலியானதாகவும், 5,000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.