Paristamil Navigation Paristamil advert login

உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரர்  யார் தெரியுமா...?

உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரர்  யார் தெரியுமா...?

13 புரட்டாசி 2023 புதன் 08:48 | பார்வைகள் : 3913


உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரராக மும்பையில் வசிக்கும் பாரத் ஜெயின் என்பவர் கருதப்படுகிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 7.5 கோடி ஆகும்.

மும்பையில் வசிக்கும் பாரத் ஜெயின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்தார்.

தற்போது மும்பையின் ஆசாத் மைதானத்தில் பிச்சை எடுத்து வருகிறார்.

வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாத நிலையில் அவர் பிச்சை எடுப்பதையே தொழிலாக செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த இரண்டு இடங்களிலும் அழுக்குத் துணியுடனும், பிச்சை எடுக்கும் அவரை பார்க்கும் யாராக இருந்தாலும் அவருக்கு பிச்சை அளிக்காமல் செல்ல முடியாது.

அந்த அளவுக்கு பரிதாப தோற்றத்துடன் காணப்படும் அவர்தான் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர்.

பாரத் ஜெயின் தினமும் 10 முதல் 12 மணி நேரம் பிச்சை எடுத்து 2000 முதல் 2500 ரூபாய் சம்பாதிக்கிறார். 

இவரது மாத வருமானம் ரூ 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை இருக்கும் என்கிறார்கள்.

இந்த வருமானத்தின் மூலம் இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி ஆகும்.

மும்பையில் இவருக்கு சொந்தமாக ரூ.1.2 கோடி மதிப்பிலான 2 பெட்ரூம்கள் கொண்ட வீடும், ஒரு பெட்ரூம் வீடு ஒன்றும் உள்ளன.

தானேவில் 2 கடைகள் இருக்கின்றன. 

ஒரு கடைக்கு வாடகையாக தலா ரூ.30 ஆயிரம் இவருக்கு மாதந்தோறும் வருகிறது. 

இவரது 2 குழந்தைகள் கான்வென்ட் பள்ளியில் படிப்பை முடித்து கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.மேலும் ஒரு சொகுசு கார் இவர்களுக்கு உள்ளது.

இருந்தும் பாரத் ஜெயின் தொடர்ந்து தெருக்களில் பிச்சை எடுக்கிறார்.

இத்தனை சொத்துகள் இருந்தும் தனது குடும்பத்தினருடன் பரோலில் ஒரு சிறிய வீட்டில் பாரத் ஜெயின் வசித்து வருகிறார்.    

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்