கிளிநொச்சியில் மாயமான மாணவி - பொலிஸார் விடுத்த கோரிக்கை

13 புரட்டாசி 2023 புதன் 14:50 | பார்வைகள் : 9907
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் காணாமல் போயுள்ள மாணவி ஒருவரை கண்டறிய பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இந்த மாணவியை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
18 வயதுடைய புவனேஷ்வரன் ஹனி என்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.
மேலதிக வகுப்பிற்காக சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுமி காணாமல் போன தினத்தன்று அவர் மேலதிக வகுப்பிற்கும் சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி தொடர்பில் தகவல் அறிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை குறித்த சிறுமி கண்டறியப்படாமையினால் பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1