மணிரத்தினம், கமல் கூட்டணியில் இணையும் ஜெயம் ரவி!

13 புரட்டாசி 2023 புதன் 14:50 | பார்வைகள் : 7257
உலக நாயகன் கமலஹாசனின் படத்தில் ஜெயம் ரவியும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கமலஹாசன், மணிரத்தினம் இயக்கத்தில் KH234 படத்தில் நடிக்க உள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த படத்தில் தான் ஜெயம் ரவி ,கமலுடன் இணைந்து நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது கமலஹாசன் இந்தியன் 2 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். மேலும் பிரபாஸ் உடன் கல்கி 2898 AD படத்திலும் நடித்து வருகிறார். கமல் ,மணிரத்தினம் கூட்டணியில் வெளிவந்த நாயகன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுகிறது.இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படங்களில் நாயகன் படத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.
இந்நிலையில் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இணையும் கமல் மணிரத்தினம் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். கூடுதல் தகவல் என்னவென்றால் இப்படத்தில் திரிஷா மற்றும் துல்கர் சல்மானையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்படுகின்றன.