அப்பா, அம்மாவை திடீரென சந்தித்த விஜய்..

14 புரட்டாசி 2023 வியாழன் 08:24 | பார்வைகள் : 6762
தளபதி விஜய் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களுடன் சில ஆண்டுகள் பேசாமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தந்தை, தாயை சந்தித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் ஆன விஜய் சமீபத்தில் தனது தாய் தந்தையை சந்தித்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளதாக தெரிகிறது
மேலும் அப்பா அம்மாவுடன் விஜய் அடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தந்தையுடன் கருத்து வேறுபாடு இருப்பதால் இனிமேல் அவரை சந்திக்கவே மாட்டார் என்று விஜய் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அந்த வதந்திக்கு முடிவு கட்டும் வகையில் இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.