லிபியாவின் பெருவெள்ளம் தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல்
14 புரட்டாசி 2023 வியாழன் 08:48 | பார்வைகள் : 5990
கிழக்கு லிபியாவில் புயல் மற்றும் கன மழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது.
இந்த இரண்டு அணைகள் உடையும் நிலை உருவாகியது.
இதனால் சுனாமி பேரலை போன்று வெள்ளம் டேர்னா நகரத்தை மொத்தமாக மூழ்கடித்தது.
வெள்ளப்பெருக்கின் வேகம், மக்களையும் சேர்த்து குடியிருப்புகளை கடலுக்குள் தள்ளியது. இதனால் சுமார் 10,000 பேர்கள் வரையில் மாயமாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
ஆனால் தற்போது டேர்னா நகர மேயர் தெரிவிக்கையில், அணைகள் இரண்டு உடைந்ததை அடுத்து ஏற்பட்ட சுனாமி போன்ற வெள்ளப்பெருக்கில் சிக்கி, 18,000 முதல் 20,000 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெருவெள்ளத்தில் சேதமடைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களை கணக்கில் கொண்டு இந்த எண்ணிக்கையை தாம் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மீட்கப்படாத உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் அல்லது கடலில் காணப்படுவதால் நோய் அபாயம் அதிகரித்துள்ளது.
சுமார் 100,000 மக்கல் குடியிருந்து வந்த பகுதியாகும் டேர்னா.
துறைமுக நகரமான டேர்னா தற்போது மொத்தமாக சிதைந்து காணப்படுகிறது. பொதுவாக செப்டம்பர் மாதம் மொத்தமாகவே 1.5 மில்லி மீற்றர் மழைப் பொழிவு மட்டுமே பதிவாகும் லிபியாவில், 24 மணி நேரத்திற்கும் குறைவான கால அளவில் சில பகுதிகளில் 400 மில்லி மீற்றர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
இதுவே இரு அணைகளில் நீர் மட்டம் உயருவதால் உடைந்து போக கூடிய அளவில் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.