ஜேர்மனியில் பிரோலா வைரஸ் - புதிய கொரோனா மாறுபாடு
14 புரட்டாசி 2023 வியாழன் 10:06 | பார்வைகள் : 6394
கொரோனா வைரஸ் தொற்றின் பல்வேறு மாறுபாடுகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் மாறுபாடு உலகில் பரவ ஆரம்பித்துள்ளது.
அந்த புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு, BA.2.86 அல்லது ‘Pirola’ என அழைக்கப்படுகிறது.
இந்த வைரஸ் எந்த அளவுக்கு மோசமானதா என்பது பற்றி ஆய்வுகள் நடாத்தப்படுகின்றது.
இந்த பிரோலா வைரஸ் தனது புரத அமைப்பில் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.
ஆகவே, அது மிக வேகமாக பரவக்கூடும் என்பதுடன், அது ஏற்கனவே கொடுக்கப்பட்ட தடுப்பூசியின் தாக்கத்தைத் தாண்டி தொற்றை ஏற்படுத்திவிடக்கூடும் என்னும் விடயம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஜேர்மனியில், கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் இந்த புதிய கொரோனா மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.