ஒலிம்பிக் போட்டிகளின் போது Notre-Dame de Paris தேவாலயத்தின் 100 மீட்டர் கூரையை பார்க்க முடியும். Philippe Jos.
14 புரட்டாசி 2023 வியாழன் 12:07 | பார்வைகள் : 6692
பிரான்ஸ் நாட்டின் பிரதானமான அடையாளங்களில் ஒன்றான Notre-Dame de Paris தேவாலயம் கடந்த 2019ல் ஏற்பட்ட பாரிய தீவிபத்தின் பின்னர் திருத்த வேலைகளுக்காக மூடப்பட்டது. குறித்த தேவாலயம் எதிர்வரும் 2024 டிசம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் வரும் 2024 யூலை மாதத்தில் ஆரம்பமாகவுள்ள JO Paris 24 ஒலிம்பிக் போட்டிகளின் போது உலகம் எங்கிருந்தும் பிரான்சுக்கு வரவிருக்கும் மக்கள் Notre-Dame de Paris தேவாலயத்தை பார்க்க முடியாமல் போகும் என்னும் கவலையைப் போக்கும் விதமாக Philippe Jos என்னும் கட்டுமான பணிகளின் தலைவர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
கட்டுமான பணிகளின் தலைவராக இருந்து கடந்த கோடைகாலத்தில் மரணித்த ஜெனரல் Jean-Louis Georgelin இடத்திற்கு கடந்த வாரம் நியமிக்கப்பட்ட அவரின் வலதுகையான Philippe Jos குறிப்பிடும்போது "ஒலிம்பிக் போட்டிகளின் ஆடம்பரமான ஆரம்ப நிகழ்ச்சிகள் Seine நதியில் நடக்கும் போது Notre-Dame de Paris தேவாலயத்தை முழுமையாக பார்க்க முடியாது ஆனால் அதன் 100 மீட்டர் கூரையை, ஆலயத்தின் நிழலை பார்க் முடியும். அதற்கான பணிகளை நாங்கள் துரிதப்படுத்தி உள்ளோம் " என தெரிவித்துள்ளார்.