Paristamil Navigation Paristamil advert login

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் புதிய சாதனை

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் புதிய சாதனை

14 புரட்டாசி 2023 வியாழன் 11:15 | பார்வைகள் : 5734


இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார சாதனை படைத்தார்.


நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 181 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 124 பந்துகளில் 182 ஓட்டங்கள் குவித்தார்.

இது அவருக்கு ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் எடுத்த அதிபட்ச ஸ்கோர் ஆகும். 

அதேபோல் ஒருநாள் போட்டியின் ஒரு இன்னிங்ஸ் அதிக ஸ்கோர் எடுத்த இங்கிலாந்து அணி வீரர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்தார். 

இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு ஜேசன் ராய் 180 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், ஸ்டோக்ஸ் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஸ்டோக்ஸ், மீண்டும் களத்திற்கு வந்த சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து வீரர்களின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்:

பென் ஸ்டோக்ஸ் - 182

ஜேசன் ராய் - 180

அலெக்ஸ் ஹால்ஸ் - 171

ராபின் ஸ்மித் - 167*

ஜோஸ் பட்லர் - 162*
 

வர்த்தக‌ விளம்பரங்கள்