எல்லோரையும் ஈர்க்கும் உளவியல் காரணங்கள்
14 புரட்டாசி 2023 வியாழன் 11:23 | பார்வைகள் : 3965
எல்லோரையும் ஈர்ப்பதற்கான உளவியல் காரணத்தை பற்றி முதலில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஈர்க்கும் திறனில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வகையான ஈர்க்கும் விஷயங்கள் உள்ளன.
இரண்டுபேருக்குமே பொருந்தக்கூடிய பொதுவான விஷயங்கள் உள்ளன.
அவை என்ன என்பதை பார்க்கலாம்.
இந்த ஈர்ப்பு என்பது பொதுவாக 4 விஷயங்களில் நடக்கும்.
முதலில் சோசியல் அதாவது நாம் எப்படி பழகுகிறோம்.
இரண்டாவது சைக்கலாஜிக்கல் அதாவது நம்முடைய மனப்பான்மை, சிந்தனை அதைப்பற்றியது.
மூன்றாவது மெட்டீரியல் அதாவது பொருட்களை வைத்து பிடிப்பது,
நான்காவது பிசிக்கல் அதாவது உடல் அமைப்பை பொருத்தது.
இவ்வாறு நான்கு வகையாக பிரித்துக்கொள்ளலாம்.
முதலில் சமுதாயத்தில் ஒரு மனிதர் எப்படி இருந்தால் அவரை எல்லோருக்கும் பிடிக்கும். இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த மனிதருக்கு ஹியூமர் இருக்க வேண்டும். அந்த ஹியூமரில் கூட நல்ல ஹியூமர், கெட்ட ஹியூமர் என்று உள்ளது. உதாரணத்துக்கு ஒருவரது உடல் அமைப்பை கிண்டல் செய்வது.
அதையே நாம் தொடர்ந்து செய்தால் உங்களுடைய வாழ்க்கையும் டார்க்காக இருக்கும். அதுமட்டுமில்லாமல் உங்களுடன் இருக்கும் நபர்கள் என்றைக்குமே இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. அப்போ சரியான ஹியூமர் என்ன என்றால், மற்றவர்களை பாதிக்காமல் எந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவையாக கூறும் தன்மை தான் சரியான ஹியூமர்.
இரண்டாவது கனெக்ஷன்ஸ். உங்களால் எந்த அளவிற்கு மற்றவர்களிடம் கனெக்ட் ஆக முடிகிறதோ அந்த அளவிற்கு கனெக்டிவாக தெரிவீர்கள். உதாரணத்துக்கு உங்களிடம் ஒருவர் வந்து பேசுகிறார் என்றால் அந்த நபரை உங்களுக்கு தெரியாமல் இருந்தால் கூட அவர்கூறும் விஷயங்களை நீங்கள் ஆர்வமாக கவனிக்கும்போது அவருக்கு உங்கள் மேல் ஒரு இணக்கம் இருக்கும். எந்த ஒருமனிதனால் எல்லோரையும் ஒருங்கிணைத்து செல்லமுடியுமோ அவர் தனியாக தெரிவார்.
இதைத்தான் மற்றவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் தன்மை என்கிறோம். மூன்றாவதாக சவுகரியம். அதாவது எல்லோரிடமும் எளிதாக பழகும் தன்மை. உதாரணமாக இப்போது 4 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் புதிதாக ஒருவர் வந்து சேர்ந்தால் அவருக்கு மனதில் ஒரு புதுவித தன்மை இருக்கும்.
எப்படி நடந்துகொள்வது, எப்படி பேசுறது என்ற மனநிலை இருக்கும். அவரிடம் நீங்கள் சகஜமாக பேசுவதும், பழகுவதுமாக நடந்துகொண்டால், அது அவர்களுக்கு உங்களிடம் எளிதாக பழகுவதற்கு சவுகரியத்தை ஏற்படுத்தும். அப்போது உங்களை மற்றவர்களுக்கு எளிதாக பிடிக்க ஆரம்பித்துவிடும். இப்போது நாம் கூறக்கூடிய இந்த 4 வகை தன்மைகளையும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நடைமுறைபடுத்துவதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நான்காவது சைக்கலாஜிக்கல். எத்தனை தடவை ஒருவர் உங்களை பார்க்கிறாரோ அந்த அளவிற்கு அவருக்கு உங்களை பிடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இதனால் தான் காதலும் இந்த தன்மை இருப்பவர்களிடம் உருவாகிறது. உதாரணத்திற்கு ஒரேபள்ளியில் படிப்பவராகவோ, ஒரே பஸ்சில் பார்ப்பவராகவோ, அலுவலகத்தில் வேலைபார்ப்பவராகவோ அல்லது ரெயிலில் தினமும் உங்களோடு பயணப்பவர்களாக கூட இருக்கலாம்.
ஏன் இவர்களிடம் ஒரு இணக்கம் உருவாகிறது என்றால். திரும்பத்திரும்ப ஒரு நிகழ்ச்சியோ அல்லது திருப்பத்திரும்ப ஒருவரை நாம் பார்ப்பதாலோ ஏற்படுகிறது.
யாரிடம் பழகுவதில் எளிதாகவும், பழகுவதற்கு வசதியாகவும் இருக்கிறதோ அவரை தான் மற்றவர்களுக்கும் பிடிக்க ஆரம்பிக்கிறது.
யார் ஒருவருக்கு நாம் புது கருத்தை சொல்லும்போது, அது அப்படி இல்லை, இப்படி இல்லை என்று சொல்லாமல் அவர்கள் சொல்வதிலும் உண்மை இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று ஏற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு பிடித்தமானவர்களாக இருப்பார்கள்.
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்துக்கள் இருக்கும். உண்மை இருக்கும். அவர்கள் நினைப்பது தான் சரி என்ற உள்ளுணர்வு இருக்கும்.
ஒருவரிடம் நாம் சென்று பேசுவதில் தால் இணக்கம் ஏற்படும் என்று நினைத்துக்கொள்கிறோம்.
அது உண்மையல்ல, எந்த ஒரு மனிதர் நாம் சொல்வதை கேட்கிறாரோ அல்லது ஒருவர் சொல்வதை காதுகொடுத்து கேட்கிறாரோ அவரையும் மற்றவர்களுக்கு பிடிக்கும். இறுதியாக கான்பிடெண்ட்.
எந்த ஒரு மனிதரும் தான் செய்யக்கூடிய விஷயத்தை மிகவும் உறுதியுடன் செய்கிறாரோ அவரையும் எல்லோருக்கும் எளிதில் பிடிக்கும்.