அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி - அமைச்சர்களுக்கு விடுமுறைஇரத்து
14 புரட்டாசி 2023 வியாழன் 13:13 | பார்வைகள் : 13259
பிரான்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடுத்தடுத்த தொடர் நிகழ்வுகளால்அமைச்சர்களுக்கு விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் Gérald Darmanin இன்று வியாழக்கிழமை இதனைஅறிவித்தார். பாப்பரசர் பிரான்சுக்கு வருகை தரவுள்ளார். அவரைத் தொடர்ந்துசாள்ஸ் மன்னர் தனது துணைவியாருடன் பிரான்சுக்கு வருகை தர உள்ளார். அத்தோடு ரக்ஃபி உலகக்கிண்ணமும் இடம்பெற்று வருகிறது.
இந்த தொடர் நிகழ்வுகளைத் தொடர்ந்து அமைச்சர்கள் வரும் வாரத்தில் தங்களதுவிடுமுறைகளை முடிந்தவரை தவிர்க்குமாறு உள்துறை அமைச்சர்கேட்டுக்கொண்டுள்ளார்.
செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான ஒருவார காலம்விதிவிலக்கான ‘நெருக்கடியான’ வாரமாக அமையும் என உள்துறை அமைச்சர்தெரிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan