மொரோக் மீட்புப் பணிகளுக்கு பிரான்சை புறக்கணித்து நான்கு நாடுகளுக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது?
11 புரட்டாசி 2023 திங்கள் 10:56 | பார்வைகள் : 5724
மொரோக்கோவில் ஏற்பட நிலநடுக்கத்தை அடுத்து உலகநாடுகள் பலவும் தங்கள் உதவிகளை வழங்க முன்வந்த நிலையில், இரண்டு நாட்களாக மௌனம் காத்து வந்த மொரோக் தங்கள் நாட்டிற்குள் மீட்புப் பணிகளை செய்வதற்கு ஸ்பெயின், பிரிட்டன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு அங்கிகாரம் வழங்கி உள்ளது.
பிரானஸ் அரசதலைவர் முதல், மொரோக்கோவிற்கான பிரான்ஸ் தூதுவர், வெளியுறவு அமைச்சர் என பலரும் தாங்கள் உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தும் மொரோக் பிரான்சின் உதவியை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் மொரோக்கோவில் இயங்கும் (organisation non gouvernementale) அரசு சார்பற்ற அமைப்புக்கள் மூலம் பிரான்ஸ் அரசு ஐந்து மில்லியன் Eurosகளை வழங்கவுள்ளதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Catherine Colonna தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் உதவி வேண்டாம் என நிராகரிக்கும் நாட்டிற்கு பிரான்ஸ் ஏன் பண உதவி செய்கிறது?" என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் Catherine Colonna "மொரோக் எந்த நாட்டின் உதவியையும் நிராகரிக்கவில்லை மாறாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, எங்களின் தீயணைப்பு படையினர் சிலர் அங்கு மீட்புப் பணியில் உள்ளனர், எங்களின் ONG அமைப்பும் அங்கு சென்றுள்ளது " என விடையளித்தார்கள்.