Paristamil Navigation Paristamil advert login

உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடர்பில் மிட்செல் மார்ஷலின் கருத்து

உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடர்பில் மிட்செல் மார்ஷலின் கருத்து

11 புரட்டாசி 2023 திங்கள் 10:16 | பார்வைகள் : 5855


இந்தியாவில் அக்டோபர் 5ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்கள் Squad-ஐ அறிவித்து வருகின்றன.

ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரை வீரர்களின் தேர்வு பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

மறுபுறம் எந்த அணி அரையிறுதிக்கு, இறுதிப்போட்டிக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றும் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் அவுஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் வீரரான மிட்செல் மார்ஷ் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில்,

'என்னைப் பொறுத்தவரை நேர்மையாக கூற வேண்டுமென்றால் எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தான் இறுதிப் போட்டியில் விளையாடும்' என்றார்.

இந்தியாவில் உலகக்கோப்பை நடப்பதால் போட்டியை நடத்தும் அணியே கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மிட்செல் மார்ஷ் கூறியுள்ள கருத்து கிரிக்கெட் ஆர்வலரிடம் விவாதங்களை கிளப்பியுள்ளது.      

வர்த்தக‌ விளம்பரங்கள்