Franceசின் தெற்கில் உள்ள ஒன்பது மாவட்டங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கை.
11 புரட்டாசி 2023 திங்கள் 10:45 | பார்வைகள் : 7361
கடுமையான வெப்பநிலை ஏறத்தாழ பிரான்ஸ் முழுவதும் கடந்த சில நாட்களாக நிலவிவந்த நிலையில், காலநிலை அவதான மையம் தெற்கே உள்ள ஒன்பது மாவட்டங்களும் இன்று மாலையில் இருந்து செம்மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று மாலை 7மணிமுதல் Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Gers மற்றும் Landes ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ஆரம்பிக்கிறது என்றும். பின்னர் மாலை ஒன்பது மணிமுதல் Gironde, Tarn-et-Garonne, Lot-et-Garonne, Dordogne, Lot ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீடிக்கும் என்றும் பிரான்ஸ் காலநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய புயல் மழையும், சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் எதிர்பார்க்கப் படுவதாகவும், குறித்த மாவட்டங்களில் கனமழையும், புயலும் வலுவானதாக இருக்கும் எனவும் பிரான்ஸ் காலநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
குறித்த வானிலை ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரான்சின் தென்பகுதிக்கு நகர்ந்து வருவதாக காலநிலை அவதான மையம் மேலும் தெரிவித்துள்ளது.