அட்லியின் அடுத்த அதிரடி கதாநாயகன் இவரா?
11 புரட்டாசி 2023 திங்கள் 11:51 | பார்வைகள் : 8915
‘ராஜா ராணி’ ’தெறி’ ’மெர்சல்’ ’பிகில்’ மற்றும் ’ஜவான்’ என ஐந்து வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. இதுவரை தோல்வியே காணாத அவர் கமர்சியலாக வெற்றி பெற்றுள்ளார் என்பதும் இதனால் அவருக்கு திரையுலகில் எப்போதும் டிமாண்ட் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’ஜவான்’ திரைப்படத்தை முடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தையுடன் மூன்று மாதம் முழுமையாக ஓய்வு எடுக்கப் போவதாக கூறியுள்ள அட்லி இயக்கும் அடுத்த படம் எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அட்லி அடுத்ததாக அல்லு அர்ஜுன் திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், அட்லி ஓய்வுக்கு பின் சென்னை திரும்பியவுடன் இந்த படத்தின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan