Paristamil Navigation Paristamil advert login

விஜய், லோகேஷ் கனகராஜ் இடையில் மோதலா ?

விஜய், லோகேஷ் கனகராஜ் இடையில் மோதலா ?

11 புரட்டாசி 2023 திங்கள் 12:30 | பார்வைகள் : 7565


பட உருவாக்கத்தில் விஜய்க்கும், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே மோதல் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கதைப்படி இல்லாத சில காட்சிகளை விஜய் சேர்க்கச் சொன்னதாகவும், அப்படியெல்லாம் சேர்க்க மாட்டேன் என லோகேஷ் சொன்னதாகவும் அதனால் இருவருக்கும் மோதல் என்கிறார்கள். அதனால், படத்தை லோகேஷின் நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் தான் பெரும்பாலும் இயக்கியதாகச் சொல்கிறார்கள்.

மேலும், லோகேஷ் கனகராஜின் டுவிட்டர் 'பயோ'வில் அவர் இயக்கிய “மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்” ஆகிய படங்களை மட்டுமே சேர்த்திருக்கிறார் என்றும் அதில் 'லியோ' காணவில்லை என்பதும் பரபரப்பாகி வருகிறது. அவர் 'லியோ' பெயரை இன்னும் சேர்க்கவில்லையா, அல்லது சேர்த்துவிட்டு நீக்கிவிட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இருப்பினும் 'லியோ' படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் எதிரிகள் இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள் என விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்